கபாலம் இல்லாமல் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளதால் 24 வார கருவை கலைக்க அனுமதி :உச்ச நீதிமன்றம் உத்தரவு

கபாலம் இல்லாமல் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளதால் 24 வார கருவை கலைக்க அனுமதி :உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றில் வளரும் 24 வார கரு, கபாலம் இல்லாத குழந்தையாக பிறக்கும் வாய்ப் புள்ளதால், அக்கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி யுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 22 வயது கர்ப்பிணிப் பெண், தனது வயிற்றில் வளரும் கருவில் அனென்சிஃபாலி என்ற குறைபாடு இருப்பதை கடந்த டிசம்பர் மாதம் அறிந்தார். கர்ப்ப காலம் தொடர்ந்தால், கபாலம் இல்லாமல் குழந்தை பிறக்கக் கூடும் என்றும், குழந்தை பிறந்தா லும் தொடர்ந்து உயிர் வாழ இயலாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால், கருவை கலைத்துவிடு மாறு மருத்துவர்களிடம் அப்பெண் கோரினார். 20 வார கர்ப்ப காலத்தை கடந்துவிட்டதால், சட்டப்படி கருக் கலைப்பு செய்ய முடியாது என டிசம்பர் 20-ம் தேதி மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.

மருத்துவ ரீதியான கருக் கலைப்புச் சட்டத்தின் படி, 20 வாரங்கள் கடந்த கருவைக் கலைத் தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதே சமயம், தாயின் உயிருக்கு ஆபத்து நிலவும் சூழலில் சில விதிவிலக்குகள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் கருக் கலைப்பை மேற்கொள்ள அனு மதிக்குமாறு, மும்பை பெண் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசா ரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், கருவில் உள்ள குறைபாடு குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

கபாலம் இல்லாமல் குழந்தை உயிர் வாழ இயலாது எனக் குறிப்பிட்டு, மும்பை கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில், அப்பெண் கருக்கலைப்பு செய்துகொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தது. ‘மனுதாரரின் உயிர் வாழ்வதற் கான உரிமையை பாதுகாக் கும் நோக்கில், சட்டப்படி மனுதாரர் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது’ என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப் பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in