

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் 2 மகன்களும் பிஹார் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் தேஜ் பிரதாப் மாநில சுகாதார துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகின்றனர். இருவரும் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:
கடந்த 2010-ம் ஆண்டில் அவுரங்காபாத் மாவட்டத்தில் ரூ.53.34 கோடி மதிப்பிலான நிலத்தை தேஜ் பிரதாப் வாங்கியுள்ளார். அந்த விவரத்தை தேர்தல் பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடவில்லை. ஒட்டுமொத்தமாக ரூ.15 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை அவர் மறைத்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம்.
மாநில முதல்வர் நிதிஷ்குமார் தனது அமைச்சரவையில் இருந்து தேஜ் பிரதாபை நீக்க வேண்டும். ஆனால் அதற்கு அவருக்கு துணிவில்லை. அவர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.