

கேரளா, திருவனந்தபுரத்தில் பொதுத்துறை வங்கி ஏடிஎம் ஒன்றில் கருவியைப் பொருத்தி போலி ஏடிஎம் அட்டைகள் தயாரித்து சுமார் ரூ.2.5 லட்சம் வரை பணம் கொள்ளை அடித்த விவகாரத்தில் ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கேரள போலீஸ் இவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
முதலில் மும்பை போலீஸ் இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகே கேரளா போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிகிறது.
மும்பை போலீஸின் முதற்கட்ட விசாரணையில் மூன்று பேர் ஜூன் 25-ம் தேதி இந்தியா வந்து பிறகு கேரளா வந்துள்ளனர். இவர்கள் டூரிஸ்ட் விசாவில் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.