

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியின்போது நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
“சர்வதேச யோகா தினத்தில் தாத்தா - பாட்டி, பெற்றோர், குழந்தைகள் என மூன்று தலைமுறையினர் யோகாசனம் செய்யும் படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் அழைப்பை ஏற்று, சர்வதேச யோகா தினத்தில் நாடு முழுவதும் ஏராளமான குடும்பத்தினர், 3 தலைமுறையினர் யோகாசனம் செய்யும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
சில குடும்பத்தினர் நான்கு தலைமுறையினர் யோகா சனம் செய்யும் படங்களையும் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கடந்த சில நாட் களாக 3 தலைமுறையினரின் யோகாசன புகைப்படங்கள், வீடியோக்கள் குவிந்து வரு கின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை கடந்த 2014 டிசம்பரில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.