ராகுல் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

ராகுல் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
Updated on
1 min read

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நேற்று 47-வது பிறந்த நாளாகும். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், “காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் பூரண நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

“மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கிய மும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என்று அவர் ட்விட் செய்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in