இந்திய இளைஞர் வாஷிங்டனில் சுட்டுக் கொலை: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

இந்திய இளைஞர் வாஷிங்டனில் சுட்டுக் கொலை: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்
Updated on
1 min read

வாஷிங்டனில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் 26 வயது இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று (சனிக்கிழமை) ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் விக்ரம் ஜெய்ரால் என்ற 26 வயதுடைய இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. கொல்லப்பட்ட இளைஞர் 25 நாட்களுக்கு முன்னர்தான் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். வாஷிங்டனில் உள்ள எரிவாயு நிலையத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவரது கடையில் நுழைந்த முகமூடியணிந்த இரு நபர்கள் அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு துப்பாக்கியால் அவரது மார்பில் சுட்டனர். இதில் விக்ரம் இறந்தார்.

சான் பிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளை விக்ரமின் குடும்பத்திற்கு உதவ கோரியுள்ளோம். இந்த கொலைத் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளை பிடிக்க விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in