தொலைத்தொடர்புத் துறையில் முன்னேற வேண்டும் : பிரதமர்

தொலைத்தொடர்புத் துறையில் முன்னேற வேண்டும் : பிரதமர்
Updated on
1 min read

தொலைத்தொடர்புத் துறையிலும், எலக்ட்ரானிக்ஸ் துறையிலும் இந்தியா அதிகம் வளர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் இத்துறையில் இறக்குமதிக்கான செலவினங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஃபிக்கி அமைப்பு ஏற்று நடத்தும் இந்திய தொலைத்தொடர்பு 2013 என்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும்,தொலைத்தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது அவசியம் இல்லை எனில் 2020- ஆம் ஆண்டில் இந்தியா 300 பில்லியன் டாலர் அளவில் தொலைத்தொடர்பு சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை இறக்குமதி செய்ய நேரிடும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in