Published : 12 Oct 2014 01:34 PM
Last Updated : 12 Oct 2014 01:34 PM

பிஹார் ரிசர்வ் போலீஸில் தனித்தனி சமையல் அறைகள்: மனித உரிமை ஆணையத்திடம் ஒப்புதல்

பிஹார் ரிசர்வ் போலீஸ் முகாமில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு தனித் தனி சமையல் அறைகள் செயல்பட்டு வருகின்றன. இதை அதன் ஐ.ஜி. தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அளித்துள்ள பதிலில் ஒப்புக் கொண்டுள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவின் சிவில் லைன் பகுதியில் அம்மாநிலத்தின் ரிசர்வ் போலீஸார் 14 பேரக்குகளில் தங்கியுள்ளனர். பல்வேறு சமூகங்களை சேர்ந்த வர்கள் பணியாற்றும் இதில், சமூகத்தினருக்கு ஏற்றபடி சமை யலறை அமைத்து பிரிவினை காட்டப்படுவதாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் புகார் அனுப் பப்பட்டது.

உச்ச நீதிமன்ற மூத்த வழக் கறிஞர் ராதாகாந்த் திரிபாதியின் இந்தப் புகாரை மனித உரிமை ஆணையம் ஏற்றுக் கொண்டு, பிஹார் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸுக்கு கடந்த செப்டம்பர் 12-ம் தேதி பிஹார் போலீஸ் ஐ.ஜி. சுதான்ஷு குமார் அளித்துள்ள பதிலில், 11 பேரக்குகளில் சமையலறைகள் இருப்பதாகவும், ஒவ்வொரு சமூகத்தினருக்கும் எனத் தனியாக அவர்கள் அமைத்து செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதில் ராஜ்புத் சமூகத்தினருக்கு பேரக் எண்-3, பூமியார் சமூகத்தினருக்கு பேரக் எண்-6, பிராமணர் சமூகத்தினருக்கு பேரக் எண்-5, யாதவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பேரக் எண்-9-ம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஹார் மாநில ரிசர்வ் போலீஸ் படையில் பல்வேறு பணிகளில் உள்ள சுமார் 80,000 பேரில் பாட்னாவில் மட்டும் சுமார் 30,000 பேர் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு பேரக்குகளிலும் அதன் இடத்தை பொறுத்து 2000 முதல் 3000 போலீஸார் தங்கி உள்ளனர். இந்தப் பிரச்சினை, அம்மாநி லத்தில் ஐக்கிய ஜனதா மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியின் முதல்வராக நிதிஷ்குமார் முதன்முறையாக வந்தபோது 2006-ல் எழுப்பப் பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நிதிஷ்குமார், உடனடியாக அனைவருக்கும் ஒரே சமையலறை அமைக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனாலும் இந்தநிலை மாறாமல் இன்னும் தொடர்வது, மனித உரிமை ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட பதிலில் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x