

மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை செயலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், “மாநிலங்களவை கூட்டத் தொடரை ஜூலை 17 (திங்கள்கிழமை) முதல் ஆகஸ்ட் 11 (வெள்ளிக்கிழமை) வரை நடத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அடுத்த கூட்டத்தொடரை மேற்கண்ட நாட்களில் நடத்தலாம் என்று குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.