

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் ‘மங்கள்யான்’ விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மாற்றி அமைத்துள்ளது.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறும் போது, “மங்கள்யான் விண்கலத்தில் 30 கிலோ எரிபொருள்தான் உள்ளது. இந்நிலையில், கிரகணம் நீண்டநேரம் நீடித்தால் வெளிச்சம் குறைந்து, எரிபொருள் விரைவில் தீர்ந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே, மங்கள்யானின் சுற்று வட்டப் பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரகணம் காரணமாக விண்கலத்துக்கு பாதிப்பு ஏற்படாது. இதன்மூலம் மங்கள்யான் நீண்ட காலம் செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்