சச்சினுக்கு பாரத ரத்னா கூடாது: தேர்தல் ஆணையத்திடம் புகார்

சச்சினுக்கு பாரத ரத்னா கூடாது: தேர்தல் ஆணையத்திடம் புகார்

Published on

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு தேர்தல் ஆதாயத்திற்காகவே இவ்விருது வழங்கப்பட்டிருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான தேபாஷிஷ் என்பவர் மத்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

தேபாஷிஷ் தனது புகார் மனுவில், 'நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சச்சினுக்கு, தற்போது சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், மபி, சத்தீஸ்கர் மற்றும் மிசோராம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதனால், சச்சின் டெண்டுல்கருக்கு விருது அளிக்கப்பட்டதன் தாக்கம் வாக்களிப்பதிலும் எதிரொலிக்கும்' என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in