4 ஆண்டுகளுக்கு முன்பு முப்படைகளில் பணியில் சேர்க்கப்பட்ட அக்னி வீரர்களுக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு

முப்படைகளின் தலைமைத் தளபதி என்.எஸ்.ராஜா தகவல்
4 ஆண்டுகளுக்கு முன்பு முப்படைகளில் பணியில் சேர்க்கப்பட்ட அக்னி வீரர்களுக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: அக்னி வீரர்​களுக்கு 2 ஆண்டு பணி நீட்​டிப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்​புதல் அளித்​துள்​ள​தாக முப்​படைகளின் தலை​மைத் தளபதி என்.எஸ். ராஜா சுப்​ரமணி நேற்று அறிவித்தார்.

இந்​திய ராணுவத்​தின் முப்​படைகளி​லும் (ராணுவம், விமானப்​படை, கடற்​படை) இளைஞர்​களைக் குறுகிய கால அடிப்​படை​யில் பணி​யமர்த்​து​வதற்​காக, மத்​திய அரசு ‘அக்​னிபாத்’ என்ற புதிய ஆட்​சேர்ப்பு திட்​டத்தை கடந்த 2022-ல் அமல்​படுத்​தி​யது. இத்​திட்​டத்​தின் கீழ் தேர்வு செய்​யப்​படும் இளைஞர்​கள் ‘அக்னி வீரர்​கள்’ என்று அழைக்​கப்​படு​கிறார்​கள்.

இவர்​களுக்கு 6 மாத கால ராணுவப் பயிற்​சி​யுடன் சேர்த்து, மொத்தம் 4 ஆண்​டுகள் முப்​படைகளில் பணி​யாற்​றும் வாய்ப்பு வழங்கப்​படு​கிறது. 4 ஆண்​டுகால சேவைக்​குப் பிறகு, தகுதி​யின் அடிப்படை​யில் 25% வீரர்​கள் ராணுவத்​தில் நிரந்​தரப் பணி​யில் சேர்க்கப்​படுவர். மீதமுள்ள 75% வீரர்​கள் பணி​யில் இருந்து விடுவிக்கப்படுவர்.

இந்​நிலை​யில், டெல்​லி​யில் நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்த முப்​படைகளின் தலை​மைத் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்​ரமணி, அக்​னிபாத் திட்​டம் குறித்த முக்​கிய அறி​விப்பை வெளி​யிட்​டார். இது​குறித்து அவர் கூறும்​போது, “தங்​கள் ஆரம்பகட்ட 4 ஆண்டு பணிக்​காலத்தை நிறைவு செய்​யும் அக்னி வீரர்களில் 25% பேர் வழக்​க​மான ராணுவ வீரர்​களாக சேர்க்கப்படுவார்​கள்.

மீதமுள்ள 75% பேரைப் பொறுத்​தவரை, அவர்​களுக்கு 2-வது முறை​யாக இரண்டு வருட பணிக்​காலம் வழங்​கப்​பட வேண்​டும் என்று முப்​படைகள் பரிந்​துரைத்​தன. அதனை ஏற்று அக்னி வீரர்களுக்கு 2 ஆண்டு கால பணி நீட்​டிப்பு வழங்க மத்​திய அமைச்சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது” என்​றார்.

டிச.31-ல் வெளியேறும் நிலை

கடந்த 2022-ல் முப்​படைகளில் சேர்க்​கப்​பட்ட அக்னி வீரர்​களில் முதல் தொகுப்​பில் ராணுவத்​தில் 19,000 பேர், விமானப்​படை​யில் 2,850 பேர், கடற்​படை​யில் 2,550 பேர் என முப்​படைகளி​லும் மொத்த​மாக 24,400 அக்னி வீரர்​கள் சேர்க்​கப்​பட்​டனர்.

அவர்​களில் 18,300-க்​கும் மேற்​பட்ட அக்னி வீரர்​கள் தங்​களது 4 ஆண்டு பத​விக்​காலத்தை நிறைவுசெய்து, டிசம்​பர் 31-க்​குள் முப்படைகளில் இருந்து வெளியேற இருந்​தனர். மத்​திய அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து இவர்​களுக்கு கூடுதலாக 2 ஆண்டு காலம் பணி நீட்​டிப்பு வழங்​கப்​படும் எனத் தெரி​கிறது.

4 ஆண்டுகளுக்கு முன்பு முப்படைகளில் பணியில் சேர்க்கப்பட்ட அக்னி வீரர்களுக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு
ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்: நாளை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

X