மும்பை இசை நிகழ்ச்சியில் போதைப்பொருள் உட்கொண்ட 2 மாணவர்கள் உயிரிழப்பு

மும்பை இசை நிகழ்ச்சியில் போதைப்பொருள் உட்கொண்ட 2 மாணவர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

மும்பை: மும்பை​யில் உள்ள நெஸ்கோ மையத்​தில் கடந்த 11-ம் தேதி இரவு இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் ரூ.2,000 நுழைவுக் கட்​ட​ணம் செலுத்தி சுமார் 4,000 பேர் கலந்து கொண்​டனர்.

இதில் கலந்​து​கொண்ட சிலர் தடை செய்​யப்​பட்ட எம்டிஎம்ஏ போதைப் பொருளை உட்​கொண்​ட​தாக கூறப்படு​கிறது, இதனால் இரவு 12 மணி​யள​வில், 3 மாணவர்​களுக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்து அவர்​கள் அரு​கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர். இவர்களில் 24 வயது பெண்​ணும் 28 வயது ஆணும் மருத்துவ​மனை​யில் உயி​ரிழந்​தனர். 25 வயது பெண் கவலைக்​கிட​மான நிலை​யில் உள்​ளார்.

இதுகுறித்து மும்பை போலீ​ஸார் கூறுகை​யில், “இறந்த மாணவர்​களில் ஒரு​வர் நிகழ்ச்​சிக்கு செல்​லும் வழி​யில் டாக்​ஸிக்​குள் ஒரு மாத்​திரை​யும் நிகழ்ச்​சி​யில் இரண்டாவது மாத்​திரை​யும் உட்​கொண்​டுள்​ளார். இது போதைப் பொருள் அதி​க​மாவதற்கு வழி​வகுத்​தது. அதிக போதைப்​பொருளை உட்​கொண்​டதே மரணத்​துக்கு காரணம் என்று மருத்​து​வர்​கள் உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர். இவர்​களுக்கு மாத்​திரைகளை வழங்​கிய மற்​றொரு மாணவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். அவரிடம் இருந்து 6-7 மாத்​திரைகள் மீட்​கப்​பட்​டுள்​ளன” என்றனர்.

மும்​பைக்கு வெளியி​லிருந்து இந்த மாத்​திரைகள் கொண்டு வரப்​பட்​ட​தாக விசா​ரணை​யில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர் ஆகாஷ் சமல், நெஸ்கோ ஊழியர் சன்னி வினோத் ஜெயின், உள் பாது​காப்பு குழு உறுப்​பினர் பால கிருஷ்ணன் பலராம் மற்​றும் இரு மாணவர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நடன​மாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரு​கிறது.

நெஸ்கோ மையம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “விசாரணை​யில் அதி​காரி​களுக்கு முழு ஒத்​துழைப்பு அளித்து வரு​கிறோம். உண்​மை​கள் விரை​வில் கண்டறியப்படு வதை உறுதி செய்​திட அனைத்து தகவல்கள் மற்​றும் உதவி​களை வழங்​கி வரு​கிறோம்​” என்று கூறிள்​ளது.

மும்பை இசை நிகழ்ச்சியில் போதைப்பொருள் உட்கொண்ட 2 மாணவர்கள் உயிரிழப்பு
ஈரானின் ‘ஹார்முஸ் ஜலசந்தி மூடல்’ எனும் அமெரிக்க வியூகமும் தாக்கமும் - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in