ராஜஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக

ராஜஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக
Updated on
1 min read

காங்கிரஸின் 5 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுகட்டிவிட்டு, ராஜஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாரதிய ஜனதா கட்சி.

ராஜஸ்தானில் தனிப் பெரும்பான்மை பெறும் நிலையில், அம்மாநில பாஜகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சுமார் 140 இடங்களைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜக இருக்கிறது. காங்கிரஸ் சுமார் 30 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலோட் முதல்வராக உள்ளார். அவரது அரசின் செயல்பாடுகளுக்கான மதிப்பீடாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜக தரப்பில் வசுந்தரா ராஜே முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். அவர் தனது தொகுதியில் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இரு கட்சிகளும் 200 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.

ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் - முற்பகல் 11.15 மணி வெற்றி / முன்னணி நிலவரம்:

பாரதிய ஜனதா கட்சி - 137

காங்கிரஸ் - 32

பகுஜன் சமாஜ் - 3

இதர கட்சிகள் / சுயேச்சை - 19

மொத்தத் தொகுதிகள்: 200

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in