நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைத்த 5 தீவிரவாதிகளுக்கு சிறை

நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைத்த 5 தீவிரவாதிகளுக்கு சிறை
Updated on
1 min read

கடந்த ஆண்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் பட்டப்பகலில் வெடிகுண்டுகள் வெடித்தன. இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களின் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே தேசிய புலனாய்வு குழுவினர், மாநில போலீஸாரின் உதவியுடன் நீதிமன்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய 5 தீவிரவாதிகளை ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை பிப்ரவரி 10-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் அனைவரும் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in