Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM

225 பேர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் - முசாபர்நகர் கலவர வழக்கு

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த செப்டம்பரில் நடந்த வகுப்புக் கலவரம் தொடர்பாக 225 பேர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

வகுப்புக் கலவரம் தொடர்பாக விசாரிக்க மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.

‘இந்த குழு இதுவரை 28 கலவர வழக்குகளில் 225 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மற்ற வழக்குகளில் புகார் கொடுத்த 28 பேரைக் கண்டுபிடிக்க இயலவில்லை‘ என சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள மாவட்ட இணை கண்காணிப்பாளர் மனோஜ் ஜா தெரிவித்தார்.

போதிய ஆதாரங்கள் இல்லாத தால் 9 வழக்குகளில் இறுதி ஆய்வு அறிக்கை உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக வும் அவர் சொன்னார்.

வெவ்வேறு கலவர வழக்குகளில் தொடர்புடையவர்கள் என 522 பேரின் விவரங்களை அனுப்பி அவர்களைக் கைது செய்யும்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்குச் சிறப்பு புலனாய்வுக் குழு உத்தரவிட் டுள்ளது.

48 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என 89 பேருக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றம்சாட்ட 3 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை தொடங்கியுள்ளது என்றார் ஜா.

இதனிடையே, 6 பலாத் காரச் சம்பவங்களில் தொடர்புடை வர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 27 பேரில் ஒருவர்கூடக் கைது செய்யப்படவில்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் பலாத்காரச் சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தக் குழுவினர் மேலும் கூறினர்.

கலவரத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்றிருந்த பத்திரி கையாளரைச் சுட்டுக் கொன்றது யார் என்பது இன்னும் கண்ட றியப்படவில்லை.

கலவரம் சம்பந்தப்பட்ட 571 வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் 6386 பேருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படு கிறது. முசாபர்நகரில் மட்டும் 538 வழக்குகள் உள்ளன.

முசாபர்நகரிலும் அதன் சுற்றுப் புற மாவட்டங்களிலும் செப்டம் பரில் நடந்த வகுப்புக் கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x