

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக அத்வானி, ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மே 30-ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் பாஜக தலைவர்களான வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா, விஷ்ணு ஹரி டால்மியா ஆகியோரையும் இதே நாளில் நேரில் ஆஜராக அறிவுறுத்தியுள்ளது.
இதில் விலக்குக்கோ, ஒத்திப்போடுவதற்கோ இடமில்லை என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.