

ஜி.எஸ்.டி-யின் கட்டமைவு குறித்து விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சரக்கு மற்றும் சேவை வரி திட்டமிட்டபடி ஜூலை 1, 2017 அமலுக்கு வரும். கடைசி வணிகரையும் சென்றடையும் வகையில் விழிப்புணர்வு நிகழ்சிகளை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியம் நடத்தும். ஜி.எஸ்.டி-யின் கட்டமைவு குறித்து விரைவில் வெளியிடப்படும்.
மீதமுள்ள வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி முனையம் முறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2017 சரக்கு மற்றும் சேவை வரியை சுமுகமாக அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.