

குஜராத் மாநிலம், சூரத் அருகே வரேலி கிராமத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் 12 பேர் பலியாகினர்.
கவலைக்கிடமான நிலையில் இருக்கும் இருவருக்கு சூரத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வியாழக்கிழமையில் இருந்து சுமார் 12 பேர் இறந்த நிலையில், சூரத் மாவட்ட ஆட்சியாளர் மஹேந்திர படேல் உத்தரவின் பேரில், அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் கள்ளச் சாராயம் குடித்து இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விஷத்தன்மை வாய்ந்த மதுவகை உட்கொண்ட தாலேயே அவர்கள் இறந்ததாக ஆரம்பகட்ட மருத்துவ சோதனைகளிலும் தெரியவந்தது.
இதையடுத்து, இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த, தடயவியல் பரிசோதனைக் கூடத் துக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக, ஆட்சியாளர் படேல் கூறினார்.
இறந்தவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். சூரத்தின் தொழில்துறை மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர்.
அங்கு வசிப்பவர் இதுகுறித்து 'தி இந்து'விடம் கூறியபோது, ''பெரும்பாலான தொழிலாளர்கள் அங்கு தொடந்து சாராயத்தை உட்கொண்டு வருகின்றனர்'' என்றார்.