

தெஹல்கா இதழ் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது, பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ள பெண் பத்திரிக்கையாளார், தி ஹிந்துவிடம் பேசுகையில், தன்னையும் தன் குடும்பத்தையும் அச்சுறுத்தி, பணிய வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தெரிவித்தார்.
"22ஆம் தேதி இரவு, தேஜ்பாலின் நெருங்கிய உறவினர் ஒருவர், புதுதில்லியில் இருக்கும் என் அம்மாவின் வீட்டிற்கு வந்து, தேஜ்பாலை பாதுகாக்கும்படி கேட்டார். மேலும், நான் யாரிடமிருந்து சட்டரீதியான உதவிகளைப் பெறுகிறேன் என்றும், நான் அளித்துள்ள இந்த புகாரினால் எனக்கு என்ன ஆதாயம் கிடைக்கப் போகிறது என்றும் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டார்.
"அவரது இந்த வருகைக்குப் பிறகு, என் குடும்பத்தினரும், நானும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இது ஆரம்பம் எனவும் அச்சப்படுகிறோம்.
"தேஜ்பாலுக்கு தொடர்புடைய நண்பர்களோ, உறவினர்களோ, எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்" என அந்தப் பெண் கோரியுள்ளார்.