

இந்திய அரசியல்வாதி களில் லாலு மிகவும் வித்தி யாசமானவர். வசீகரம், நகைச்சுவை உணர்வு, தடாலடி பேச்சு என அவருக்கு பல்வேறு முகங்கள்.
மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லாலு, ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மக்களவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அவரால் பட்ஜெட்டை தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.
அப்போது, அவருக்கே உரித்தான நகைச்சுவையில், "எல்லோரும் டிராக்குக்கு வாருங்கள்" என்று எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அறிவார்ந்த நகைச்சுவையை மெச்சிய அவை அமைதிக்குத் திரும்பியது. இந்தியாவின் 28 மாநி லங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான மாநில அரசியல் தலை வர்கள் கோலோச்சுகி றார்கள். அவர்களில் எத்தனை பேரை நாடு முழுமைக்கும் தெரியும் என்றால் விரல்விட்டு எண்ணும் தலை வர்களே மிஞ்சு வார்கள். அதில் ஒருவர் தான் லாலு. பிகாரில், சாதா ரண பால்காரனின் மகனாகப் பிறந்த அவர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் வசீகரித்தவர் என்றால் மிகையாகாது. அவரது நடை, உடை, பாவனை அனைத்துமே தனி முத்திரை என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். கடைகளில் "டெடிபியர்" பொம்மைகளுக்குப் போட்டியாக "லாலு" பொம்மைகளும் விறுவிறுவென விற்றுத் தீர்ந்தது குழந்தைகளிடமும் அவரை கதாநாயகனாக அடையாளம் காட்டியது. பாலிவுட் திரைப்படங்க ளில் "லாலு" கதாபாத்திர அரசி யல்வாதிகள் வில்லன்களாக வந்து கண்களை உருட்டி மிரட்டி ரசிகர்களை அச்சுறுத்தியதும் உண்டு.