

ராஜஸ்தானில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தீவிரவாதத்துக்கு எதிரான பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி வகாஸ் கைது செய்யப்பட்டிருப்பதால் தீவிரவாதிகளின் சதி குறித்து முக்கியத் தகவல்கள் கிடைக்கும். பல்வேறு குண்டு வெடிப்புகளில் உள்ள தொடர்புகள் குறித்த உண்மைகள் வெளிவரும். மேலும் பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு, சதிச் செயல்கள் முறியடிக்கப்படும்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை. அவருக்கு தரப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்கெனவே மேம்படுத்தப்பட்டுள்ளன என்று ஷிண்டே தெரிவித்தார்.