Last Updated : 08 Mar, 2017 09:57 AM

 

Published : 08 Mar 2017 09:57 AM
Last Updated : 08 Mar 2017 09:57 AM

உலகின் 10 சிறந்த பல்கலை. பட்டியலில் முதல்முறையாக 8-ம் இடத்தில் இந்திய கல்வி நிறுவனம்

உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டிய லில் முதல்முறையாக பெங்க ளூருவில் உள்ள இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் இடம் பிடித்துள்ளது.

டைம்ஸ் நாளிதழ் 2017-ம் ஆண்டுக்கான உலகின் 10 சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரி சைப் பட்டியலை வெளியிட்டது. அதில் சிறந்த சிறிய பல்கலைக் கழகங்களின் தரவரிசை பிரிவில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் 8-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியா வைச் சேர்ந்த ஒரு கல்வி நிறு வனம் இப்பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல்முறை யாகும். இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச் சிக்கு இடையே இது குறித்து அவர் கூறும்போது, ‘‘உலகின் சிறந்த 10 பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் நமது கல்வி நிறுவனமும் இடம்பிடித் திருப்பது நல்ல செய்தியாகும். நமது கல்வியின் தரத்தை மேம்படுத்தி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முன்பை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்றார்.

மைசூரு மகாராஜாவான சர் கிருஷ்ணராஜ உடையார் மற்றும் ஜேம்செட்ஜி டாடாவின் ஆதரவுடன் கடந்த 1909-ல் இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் நிறுவப்பட்டது.

முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள அதே சமயம் கடந்த ஆண்டு சிறந்த 20 பல்கலைக் கழங்களின் பட்டியலில் 14 மற்றும் 18-வது இடங்களை முறையே பிடித்த குவாஹாட்டியின் ஐஐடி மற்றும் சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் இந்த முறை அந்த இடங்களைத் தக்க வைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

டைம்ஸ் உயர் கல்வி நாளிதழ் சார்பில் கடந்த 2004-ல் உலக பல்கலைக்கழகங்களின் தர வரிசை அமைப்பு நிறுவப்பட்டது. அந்த அமைப்பு கற்பித்தல், ஆய்வு, சர்வதேசத்தின் பார்வை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x