

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் போராட் டக்காரர்கள் மூவர் உயிரிழந்தனர்.
பட்காம் மாவட்டத்தின் துர்புக் பகுதியில் உள்ள சடூரா என்ற கிராமத்தில், தீவிரவாதிகள் பதுங்கி யிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலை சுற்றிவளைத்து, தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தீவிர வாதி ஒருவர் கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
இதற்கிடையே தீவிரவாதிகள் தப்பிச் செல்ல உதவிடும் வகையில் பாதுகாப்பு படையினர் மீது அதிக எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இவர்களைக் கலைப்பதற்கு பாது காப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 20 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் ஜாகித் தார், சாகிப் அகமது, இஷ்பக் அகமது வானி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.