

கடந்த 30 ஆண்டுகளாக தெலுங்கு திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருபவர் ப்ருத்விராஜ் (55). இவரது மனைவி ஸ்ரீலட்சுமி. விஜயவாடாவைச் சேர்ந்தவர். இத்தம்பதிக்கு கடந்த 1984ல் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஸ்ரீலட்சுமி தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி விஜயவாடா குடும்பநல நீதிமன்றத்தில் ஸ்ரீலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இதில் தனக்கு ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இவ்வழக்கில் நடிகர் ப்ருத்விராஜ் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.8 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.