

பஞ்சாப் சட்டப்பேரவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேச வாய்ப் பளிக்கப்படாததைக் கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்துக்குள் இரவு முழுக்க உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு தொடங் கிய இந்தப் போராட்டம் புதன்கிழமை (இன்று) காலை பேரவை மீண்டும் கூடும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்லெஜ்-யமுனை இணைப்புக் கால்வாய் விவகாரத்தில் ஆளும் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசு மாநிலத்தின் நலனைக் காக்கத் தவறிவிட்டது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது எனக்கூறி, அது தொடர்பாக பேரவையில் விவா திக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால், அனுமதி மறுக்கப்படவே, 27 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவைக்குள் திங்கள்கிழமை இரவு முழுக்க தங்கி, போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சரண்ஜித் சிங் சன்னி கூறும்போது, “நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து பேச பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்ட தால், காங்கிரஸின் அனைத்து எம்எல்ஏ.க்களும் பேரவைக்குள் ளேயே தங்கினோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டபோதும் இருளி லேயே எங்களின் போராட்டம் தொடர்கிறது” என்றார்.
காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்துக்கு முன்பாகவே குரல் வாக்கெடுப்பின் மூலம் தோல்வி யடையச் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.