

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயி லின் இரு குளங்களையும் இரு மாதங்களுக்குள் தூய்மைப் படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள இரு குளங்களிலும் கழிவு நீர் கலப்பதால் புனித நீராட முடிவதில்லை என பக்தர்கள் புகார் எழுப்பினர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு இரு மாதங்களுக்குள் குளங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு நேற்று உத்தரவிட்டது. அத்துடன் இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மே மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், குளம் தூய்மை பணிகள் தொடர்பான அறிக்கையை மே 2-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோயில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.