

பெங்களூருவைச் சேர்ந்த தொழி லதிபர் எம்.கே.குருவிலா 2015-ம் ஆண்டு அப்போதைய கேரள முதல்வர் உம்மன்சாண்டி உள் ளிட்ட 6 பேர் மீது பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு ஒன்றை தொடுத்தார்.
அதில், “சோலார் பேனல் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை ஒதுக்குவதாகக் கூறி, உம்மன் சாண்டி உள்ளிட்ட 6 பேர் என் னிடம் ரூ.1.6 கோடி பெற்றனர். ஆனால் ஒப்பந்தம் ஒதுக்கப்பட வில்லை. எனவே, எனது 1.6 கோடி, வழக்கு செலவுத் தொகையை 12 சதவீத வட்டி யுடன் வழங்க உத்தரவிட வேண் டும்” எனக் கோரி இருந்தார்.
இவ்வழக்கில் நீதிபதி என்.ஆர்.சென்ன கேசவா உத்தர வின் படி, கேரள முன்னாள் முதல் வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி நேற்று காலை முதல் ஆளாக நீதிமன்றத்துக்கு நேரில் வந்தார்.
நீதிபதி வேறு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்ததால், சுமார் 2.30 மணி நேரம் வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார். சாண்டியுடன் பாதுகாவலர்களோ, கட்சி யினரோ, உதவியாளர்களோ கூட நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவரது மகன் சாண்டி உம்மன் மட்டுமே வந்திருந்தார்.
மதியம் 12.30 மணியளவில் வழக்கு விசாரணைக்கு வந்த போது உம்மன் சாண்டி நீதிபதி முன்பு ஆஜரானார். அப்போது அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் ஆண்டனி, “இவ்வழக்குக்கும் எனது கட்சிக் காரர் உம்மன் சாண்டிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடனும் விளம்பர நோக்கத்துடனும் இவ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்றார்.
இதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜெயதேவா ஆட் சேபம் தெரிவித்தார். மேலும், “உம்மன் சாண்டி உள்ளிட்ட 6 பேரிடமும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும்” என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி என்.ஆர்.சென்னகேசவா, குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் வரும் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூரு சிட்டி சிவில் நீதி மன்ற கட்டிடத்தில் சுமார் 10 ஆண்டுகள் நடைபெற்றது. நீதிபதிகள் பலமுறை உத்தர விட்டும், பாதுகாப்பு காரணங் களை கூறி ஜெயலலிதா நேரில் ஆஜராகவில்லை. ஆனால் எந்த பாதுகாப்பும் இல்லாமல் உம்மன் சாண்டி ஆஜரானதால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.