உப்பு தட்டுப்பாடு வதந்தி: பீகார், மேற்கு வங்க அரசுகள் எச்சரிக்கை

உப்பு தட்டுப்பாடு வதந்தி: பீகார், மேற்கு வங்க அரசுகள் எச்சரிக்கை
Updated on
1 min read

உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் ஒரு கிலோ உப்பின் விலை ரூ.300 வரை விற்கப்பட்ட நிலையில், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார், மேற்கு வங்க அரசுகள் எச்சரித்துள்ளன.

மேலும், உப்பை பதுக்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநில அரசுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேற்கு வங்கம், பீகார், மேகாலயம், மிஜோரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது இதனால், ஒரு கிலோ உப்பின் விலை ரூ.300 வரை விற்கப்பட்டது.

இந்த நிலையில், பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களின் சில மாவட்டங்களில் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் ஒரு கிலோ உப்பு ரூ.150க்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது போதுமான உப்பு கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடு இருப்பதாக பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். தொடர்ந்து வதந்தியைப் பரப்புவோர் மீதும், உப்பை பதுக்குவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிகார் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவுப்பொருள் மற்றும் வழங்கல் துறையின புள்ளிவிவரப்படி உப்புக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை. சுயலாபம் கருதி வெளியிடப்படும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். வதந்தியைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மேற்கு வங்க அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in