

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 106 வயது மூதாட்டி, வாக்குப்பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
லூதியானாவில் 12-வது வார்டு பகுதியில் குரு அர்ஜன் தேவ் நகரில் வசித்து வருபவர் மாலா தேவி. அவருக்கு வயது 106. இந்த தள்ளாத வயதிலும் லூதியானாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.
இது குறித்து லூதியானா தேர்தல் துணை ஆணையர் ரவி பகத் கூறும்போது, ‘‘வாகனம் மூலம் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து, பின்னர் மீண்டும் அவரை வீட்டில் கொண்டு விடுவதற்கு ஏற்பாடு செய்தோம். அவரும் வயதை பொருட்படுத்தாமல் வாக்குப்பதிவு செய்து அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து விட்டார்’’ என்றார்.