6 இந்தியர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

6 இந்தியர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
Updated on
1 min read

நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் ஆண்டுதோறும் மே மாதத்தில் இந்த சிகரத்தில் ஏறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 11-ம் தேதி திபெத்தின் வடபகுதி வழியாக எவரெஸ்ட் செல்லும் பாதை திறக்கப்பட்டது.

அன்று தங்களது பயணத்தைத் தொடங்கிய 6 இந்தியர்கள் நேற்று காலையில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். சுரேஷ் பாபு, துர்கா ராவ் குஞ்சா, பரத் தம்மினெனி, கிருஷ்ணா ராவ் வூயகா, சத்ய ராவ் கரே மற்றும் நாகராஜு சுந்தரனா ஆகிய 6 பேரும் நேபாளத்தைச் சேர்ந்த 10 வழிகாட்டிகளுடன் சென்று இந்த சாதனையை படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in