

கர்நாடகாவில் பருவமழை பொய்த் ததால் வேளாண் தொழில் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீருக் கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நீர் ஆதா ரங்கள் வறண்டு போனதால் கால்நடைகளும் தண்ணீர் கிடைக் காமல் தவித்து வருகின்றன.
இந்நிலையில் வறட்சி நீங்கவும், போதிய மழை பொழியவும் வேண்டி அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் காவிரி மற்றும் கிருஷ்ணா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தலா ரூ.10 லட்சம் செலவில் சிறப்பு வருண யாகம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
இதற்கு சமூக ஆர்வலர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் அறிவித்தபடி கிருஷ்ணா நதிக் கரையில் நேற்று அமைச்சர் பாட்டீல் சிறப்பு வருண யாகத்தை நடத்தினார். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த யாகம், தொடர்ந்து இரவு 9 மணி வரை நடந்தது. இதில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கிருஷ்ணா நதிக் கரையில் யாகம் முடிந்துள்ள நிலையில், இன்று காவிரி நதிக் கரையில் சிறப்பு யாகம் நடத்தப்படவுள்ளது.