சமாஜ்வாதிக்கு வாக்களிக்காவிட்டால் துப்பாக்கி பேசும்: சம்பல் கொள்ளைக்காரர்கள் மிரட்டல் பிரச்சாரம்

சமாஜ்வாதிக்கு வாக்களிக்காவிட்டால் துப்பாக்கி பேசும்: சம்பல் கொள்ளைக்காரர்கள் மிரட்டல் பிரச்சாரம்
Updated on
2 min read

உத்தரப் பிரதேசம், பாந்தா-சித்திரகுட் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி வேட்பாளருக்கு வாக்களிக்காவிட்டால் துப்பாக்கி பேசும் என்று சம்பல் கொள்ளையர்கள் மிரட்டல் விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் பரவியிருக்கும் பகுதி சம்பல் பள்ளத்தாக்கு. இங்கு செயல்படும் கொள்ளைக்காரர்கள்தான் சம்பல் பகுதிகளின் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப் பவர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டாலும் சில கொள்ளை கும்பல்கள் இன்னமும் சம்பல் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வருகின்றன.

பூலான் தேவி மூலம்தான் சம்பல் கொள்ளையர்கள் வெளிஉலகில் பிரபலம் அடைந்தனர். அவர் போலீஸில் சரணடைந்த பிறகு சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். உத்தரப் பிரதேசத்தின் மிர்ஸாபூர் தொகுதி எம்பியாக இருந்த பூலான்தேவி 2001-ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன்பின் அவரது கணவரான உம்மேத்சிங் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றிபெறவில்லை. 2009 தேர்தலில் காங்கிரஸில் இணைந்து போட்டியிட்டும் அவர் தோல்வியைத் தழுவினார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி சார்பில் நிறுத்தப்பட்ட பால்குமார் பட்டேல் வெற்றி பெற்றார்.

இவர் உத்தரப் பிரதேச வீரப்பன் என அழைக்கப்பட்ட தத்துவா எனும் சம்பல் கொள்ளைக்காரரின் சகோதரர் ஆவார். இவருக்காக ரகசிய பிரச்சாரம் மேற்கொண்ட தத்துவா, உத்தரப்பிரதேச அதிர டிப்படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டார். தற்போது மிர்ஸாபூர் தொகுதி சீரமைக்கப்பட்டதால் அரு கிலுள்ள பாந்தா-சித்தரகுட் தொகு தியில் சமாஜ்வாதி சார்பில் பால் குமார் பட்டேல் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக சம்பல் பள்ளத் தாக்கு கொள்ளைக்காரனான பல் கடியா பட்டேல் ரகசியமாக பிரச்சாரம் செய்து வருகிறாராம்.

‘தங்களது ஆதரவு வேட்பாள ருக்கு வாக்களிக்காவிட்டால் துப்பாக்கி குண்டுகளால் பேசு வோம்’ என மிரட்டல் விடுத்து சம்பல் பள்ளத்தாக்கு கிராமப்பகுதிகளில் கொள்ளையர்கள் பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறப்படு கிறது. பல்கடியாவின் தலைக்கு மத்தியப் பிரதேச மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளனர். இவரைப் போல் சம்பல் பள்ளத்தாக்கின் முன்னாள் கொள்ளைக்காரரான கயா பாபாவும் சமாஜ்வாதிக்கு ஆதரவாக ரகசிய பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சம்பல் பள்ளத்தாக்கின் அரசியல் வட்டாரம் தி இந்துவிடம் கூறுகையில், ‘தத்து வாவின் குருவான கயா பாபா, மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த அர்ஜுன் சிங் முன்னி லையில் சரணடைந்தவர். இவர் வெளிப்படையாக பிரச்சாரம் செய்தால் சமாஜ்வாதி கட்சி மீது தவறான கருத்து உருவாகும் என அதன் தலைவர் முலாயம்சிங் அஞ்சுகிறார்’ எனக் கூறுகின்றனர்.

தத்துவாவின் மகனான வீர்சிங் பட்டேலும் தனது சித்தப்பா பால்குமார் பட்டேலுக்காக பிரச்சார மேடை ஏறி வருகிறார். இவர் சித்ரகுட்டின் கர்பி தொகுதியில் 2012-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியில் போட்டியிட்டு வென்றவர். இவரது மனைவி கர்பி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். பால்குமாரின் மகன் ராம்சிங் பட்டேல் பிரதாப்கரில் உள்ள பட்டி தொகுதி சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் கர்பி தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வென்ற பால்குமார் பட்டேல், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மிர்ஸாபூருக்கு மாறி எம்பியானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in