கூகுள் இந்தியா முகப்பில் புனா மாணவியின் கைவண்ணம்

கூகுள் இந்தியா முகப்பில் புனா மாணவியின் கைவண்ணம்
Updated on
1 min read

இன்று,(நவம்பர் 14-ஆம் தேதி) குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது. இதனை ஒட்டி கூகுள், நடத்திய கூகுள் டூடூள் போட்டியில் புனாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி காயத்ரி கேதாராமன் வெற்றி பெற்றார். அவர் வடிவமைத்த சித்திரம், இன்று கூகுள் இந்தியா முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த சித்திரத்துக்கு "Sky's the limit for Indian women"- இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை என்று பெயரிட்டுள்ளார் காயத்ரி கேதாராமன்.

GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்துள்ள காயத்ரி, அதன் அர்த்தங்களையும் விளக்கியுள்ளார். பெண் நளினமானவள், அழகானவள், வீட்டிலும் அலுவலகத்திலும் தன் வேலையை சீராக சமன் செய்யக்கூடியவள், தாய்மையின் அடையாளம் என்பதை விளக்கும் வகையில் சித்திரத்தை வரைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கூகுள் நடத்திய போட்டியில், நாடு முழுவதும் இருந்து 12 பேர் இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் வெற்றியாளரை நடிகை கிரொன் கேர் மற்றும் அரசியல் கார்ட்டூன் ஒவியர் அஜித் நினான் தேர்வு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in