தேர்தலை மனதில் கொண்டு எடுக்கப்படும் அரசியல் நடவடிக்கை: ஷிண்டேவுக்கு ஜெட்லி எதிர்ப்பு

தேர்தலை மனதில் கொண்டு எடுக்கப்படும் அரசியல் நடவடிக்கை: ஷிண்டேவுக்கு ஜெட்லி எதிர்ப்பு
Updated on
1 min read

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீதான பயங்கரவாத வழக்குகளை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கடிதம் எழுத உள்ளதாக கூறியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி.

இது, கிரிமினல் சட்டத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என்பதால், ஷிண்டே பிறப்பிக்கும் உத்தரவு மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை ஜேட்லி விடுத்துள்ள அறிக்கை: ‘ஒரு பிரிவினருக்கு எதிரான பயங்கரவாத வழக்குகளை மட்டும் மறுபரிசீலனை செய்ய குழுக்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். இந்த நடவடிக்கை தேர்தலை மனதில் கொண்டு எடுக்கப்படும் அரசியல் நடவடிக்கை.

பயங்கரவாத குற்றங்களுக் காக பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள், மாவோயிஸ்டுகள் என பல பிரிவினர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் பெரும் பான்மையினராக முஸ்லிம்கள் இருப்பதால் அவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெற மாட்டாதா?

மாவோயிஸ்டுகளில் சிறு பான்மையினர் இருந்தால் அவையும் திரும்பப் பெறப் படுமா? இவற்றைத் திரும்பப் பெறும் அதிகாரம் அரசு தரப்பு வழக்கறிஞர், நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே கிரிமினல் சட்டப்படி உள்ளது.

உள்துறை அமைச்சரின் தாக்கீது சட்டத்திற்கு புறம் பானது. அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமையை மீறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in