பிரசாந்த் பூஷன், யோகேந்திரா அரசியல் கட்சி தொடங்க முடிவு

பிரசாந்த் பூஷன், யோகேந்திரா அரசியல் கட்சி தொடங்க முடிவு
Updated on
1 min read

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் புது அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

சமூக சேவகர் அண்ணா ஹசாரே தொடங்கிய ஊழல் எதிர்ப்பு போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை பயன்படுத்திக் கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கி டெல்லியில் ஆட்சியைப் பிடித்தார். கட்சி தொடங்கவும், தேர்தலில் வெற்றி பெறவும் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் உட்பட பலர் பக்க பலமாக இருந்தனர்.

ஆனால், கேஜ்ரிவாலின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி அடைந்த இருவரும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இதையடுத்து கருத்து வேறுபாடு முற்றியதால், தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகி யோரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேஜ்ரிவால் நீக்கினார். இதற்கு கட்சியில் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதன்பின், ‘ஸ்வராஜ் அபியான்’ என்ற அமைப்பை இரு வரும் தொடங்கினர். இதில் ஆம் ஆத்மியை சேர்ந்த அதிருப்தி யாளர்கள் நூற்றுக்கணக்கில் இணைந்தனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் புதிய அரசியல் கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டி யிட இருவரும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஸ்வராஜ் அபியான் ஊடக பொறுப்பாளர் அனுபம் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘வரும் 31-ம் தேதி ஸ்வராஜ் அபியான் தேசிய நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட தேர்வு செய்யப் பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்ற னர். அப்போது புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்த முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in