

மும்பையில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரின் பேரில் லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
மும்பையின் நவ்கர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை என அந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் செவ்வாய் அன்று சாத்பூர் பகுதியில் சாலையின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியில் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார். மயங்கிய நிலையிலிருந்த சிறுமியை போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமியின் உயிர் பிரிந்துள்ளது.
சிறுமியின் உடலை மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்துள்ளதாக கூறினர்.
பாலியல் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக சகில் இஸ்மாயில் சவுத்திரி(26) என்ற லாரி ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
நவகர் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து சகில் தப்பிச் சென்ற காட்சி அருகிலிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்தது இதன் மூலமே போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.