

2017-18 நிதியாண்டுக்கான நிதி ஆதாரத்தை பொறுத்தவரை அரசின் ஒவ்வொரு ஒரு ரூபாய் நிதி ஆதாரத்திலும் கடன் மூலம் திரட்டப்படும் தொகை 19 பைசா. செலவைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஒரு ரூபாய் செலவிலும் 18 பைசா வட்டியாக செலவாகிறது.
2017-18-ம் ஆண்டுக்கான அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டின் படி அடுத்த நிதியாண்டில் நேரடி மற்றும் மறைமுக வரி வருமானத்தின் பங்கு 68 பைசாவாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
செலவினத்தை பொறுத்தவரை மிகப் பெரிய செலவினமான மாநிலங்களுக்கு வரி வருவாயை பிரித்துக் கொடுப்பதற்கு ஒதுக் கீட்டுக்கான செலவு 24 பைசா. மேலும் ஒவ்வொரு ரூபாயிலும் 18 பைசா முதலீட்டுக்கான வட்டியாக இருக்கும்.
அடுத்த நிதியாண்டில் பாது காப்புத் துறைக்கு ஒதுக்கப்பட் டுள்ள தொகை 9 பைசாவாக உள்ளது. இது கடந்த நிதியாண் டில் 10 பைசாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வருவாய் ஆதாரத்தைப் பொருத்தவரை, மிகப்பெரியதாக விளங்குவது கார்ப்பரேட் வரி. ஒவ்வொரு ரூபாயிலும் வரும் வருவாயில் கார்ப்பரேட் வரி 19 பைசாவாக இருக்கும். அதேபோல் சேவை வரி மூலம் திரட்டப்படும் வருமானம் 10 பைசாவாக இருக்கும்.
அடுத்த நிதியாண்டில் வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் அதிகப்படியானோர் வர வாய்ப்புள்ளதால் இதன் மூலம் திரட்டப்படும் வருமானம் 14 பைசாவிலிருந்து 16 பைசாவாக அதிகரிக்கும்.
சுங்கவரி உட்பட மறைமுக வரி வருமான அடுத்த நிதியாண்டில் 23 பைசாவாக அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில் 21 பைசாவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரிகள் அல்லாத பிற வருமானங்கள் மூலம் அதாவது பங்குவிலக்கல் போன்றவற்றால் 10 பைசா வருமானம் வரும் என்று கூறப்பட்டுள்ளது.