மொழி மற்றும் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் பிரணாப் வழங்கினார்

மொழி மற்றும்  இலக்கியத்தில்  சிறந்து  விளங்கும் தமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது: குடியரசுத் தலைவர் பிரணாப் வழங்கினார்
Updated on
1 min read

தமிழறிஞர்களுக்கு டெல்லியில் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செம்மொழி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2013-14, 2014-15 மற்றும் 2015-16-ம் ஆண்டுக்கான செம்மொழி விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்தது.

இதில் 2013-14ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் எஸ்.என்.கந்தசாமிக்கும், இளம் அறிஞர் விருது முனைவர் உலா பாலசுப்ரமணியன், முனைவர் கலை செழியன், முனைவர் எஸ்.ராஜலட்சுமி, முனைவர் டி.மகாலட்சுமி, முனைவர் சாலவாணி ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

இதேபோல் 2014-15-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் தட்சிணாமூர்த்திக்கும், இளம் அறிஞர் விருது முனைவர் சதீஷ், முனைவர் முத்து செல்வன், முனைவர் திருஞானசம்பந்தம், முனைவர் வசந்தகுமாரி, முனைவர் சதீஷ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

2015-16-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் கலைக் கோவனுக்கும், இளம் அறிஞர் விருது முனைவர் வனிதா, முனைவர் பிரகாஷ், முனைவர் பிரேம்குமார், முனைவர் பாலாஜி, முனைவர் முனீஸ் மூர்த்தி ஆகியோருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in