துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு முதல்வர் சவுகான் தலா ரூ.1 கோடி நிதி: நேரில் சென்று ஆறுதல் கூறி வழங்கினார்

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு முதல்வர் சவுகான் தலா ரூ.1 கோடி நிதி: நேரில் சென்று ஆறுதல் கூறி வழங்கினார்
Updated on
1 min read

மத்தியபிரதேசத்தில் வன்முறை யால் பாதிக்கப்பட்ட மான்ட்சார் நகருக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று சென்றார். இங்கு போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்த விவசாயிகளின் குடும் பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்கினார்.

மான்ட்சார் நகரில் கடந்த 6 ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீ ஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 விவசாயிகள் உயிரிழந்த னர். போலீஸாரால் தாக்கப்பட்ட மற்றொரு விவசாயி இரு நாட் களுக்கு பிறகு இறந்தார். இந்நிலை யில் வன்முறை போராட்டத்தில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நேற்று முன்தினம் தலா ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில் முதல்வர் சவுகான் தனது மனைவி சாதனா வுடன் நேற்று தனி விமானம் மூலம் மான்ட்சார் சென்றார். பின்னர் பத்வான் என்ற கிராமத் துக்குச் சென்ற சவுகான், துப்பாக்கிச் சூட்டில் இறந்த கன்ஷியாம் தகாத் என்ற விவசாயியின் குடும்பத் தினரைச் சந்தித்தார். இதையடுத்து லோத் என்ற கிராமத்தில் விவசாயி சத்யநாராயணன் குடும்பத்தின ரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அண்டை மாவட்டமான நீமுச் மாவட்டத்தில் செயின்ராம் படிதார் என்ற விவசாயியின் குடும்பத்தினரைச் சவுகான் சந்தித்தார். செயின்ராமின் தந்தை விடுத்த வேண்டுகோளை ஏற்று, கிராமத்தில் உள்ள சமுதாய மையத்துக்கு செயின்ராம் பெயர் சூட்டப்படும் எனவும் குச்லோத் நயாகெடா இடையே தார் சாலையும் அமைக்கப்படும் என சவுகான் அறிவித்தார்.

விவசாயிகளின் குடும்பத்தின ருக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சவுகான், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

முதல்வர் சவுகானின் பயணத்தையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. 5 இடங்களில் ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இதனிடையே மான்ட்சாரில் அமைதி திரும்பிய போதிலும் அங்கு செல்வதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் முன்னாள் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் போபாலில் உள்ள தசரா மைதானத்தில் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று பிற்பகல் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in