கிருஷ்ணா தலைமையில் அணிதிரளும் எம்எல்ஏக்கள்: சித்தராமையா பதவிக்கு ஆபத்து?

கிருஷ்ணா தலைமையில் அணிதிரளும் எம்எல்ஏக்கள்: சித்தராமையா பதவிக்கு ஆபத்து?
Updated on
1 min read

கர்நாடக முதல்வர் சித்தராமையா வுக்கு எதிராக முன்னாள் முதல் வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலை மையில் அணி திரள அதிருப்தி எம்எல்ஏக்கள் முடிவு செய்துள் ளனர். இதனால் சித்தராமையா வின் முதல்வர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக முதல்வர் சித்தரா மையா கடந்த வாரம் தனது அமைச்சரவையில் இருந்து 14 அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதி தாக 13 அமைச்சர்களை நியமித் தார். இதையடுத்து பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச் சர்கள் சீனிவாச பிரசாத், அம்பரீஷ், கமருல் இஸ்லாம் உள்ளிட்டோர் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இதே போல அமைச்சரவையில் இடம் கிடைக்காத 8 எம்எல்ஏக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்காவிட்டால் அம்பரீஷை போல தாங்களும் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கட்சி மேலிடத்திடம் எச்சரிக்கை விடுத்தனர்.

அத்துடன் முதல்வர் சித்தரா மையாவின் முடிவை எதிர்த்து முன்னாள் அமைச்சர்களின் ஆதர வாளர்கள் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மைசூரு உட்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் கர்நாடக காங்கிரஸில் பிளவு ஏற்பட்டதாக பேசப்பட்டது.

எனினும் இதை மறுத்த முதல்வர் சித்தராமையா கட்சிக்குள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அதற்கு மாறாக காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் 30-க்கும் மேற் பட்ட‌ அதிருப்தி எம்எல்ஏக்கள் நேற்று பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஒன்றுகூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். அப் போது சித்தராமையாவுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக் களை அள்ளி வீசி வரும் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் அணி திரண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க முடிவு செய்தனர்.

அப்போது 2018-ல் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வி தான் ஏற்படும் என சோனியாவிடம் விளக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் மும்பையில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அழைப்பு விடுத்துள்ள அதிருப்தி எம்எல்ஏக் கள், சித்தராமையாவை நீக்கி விட்டு, அவரை முதல்வராக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

சமாதான முயற்சி தோல்வி

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஆஸ்கர் பெர்ணான்டஸ் ஆகியோர் அதிருப்தியில் உள்ள சீனிவாச பிரசாத், அம்பரீஷ், கமருல் இஸ்லாம் ஆகியோரை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருப்பதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in