

கல்வீச்சுப் போராட்டம், ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் 52 நாட்களாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலைமை சீரடைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து புல்வாமா நகரில் ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டது.
எம்.ஆர்.கஞ்ச், நவெட்டா ஆகிய காவல் நிலைய எல்லை களில் மட்டும்தான் தற்போது தடையுத்தரவு அமலில் உள்ளது.
“நிலைமை சீரடைந்து வருவ தால் தடையுத்தரவு தளர்த்தப் பட்டுள்ளது. நேற்று முன்தினம் சில இடங்களில் சிறிய அளவு கல்வீச்சுப் போராட்டம் நடைபெற்றது. எனினும் ஒட்டு மொத்தமாக நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிர வாத இயக்க தளபதி கடந்த ஜூலை 8-ம் தேதி பாதுகாப்புப் படை யினரால் என்கவுன்ட்டர் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் வன்முறை வெடித்தது. கல்வீச்சுப் போராட்டம், பாதுகாப்புப் படை யினரின் பதில் தாக்குல் போன்ற வற்றால் 66-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 6,000 பேர் காயமடைந்தனர்.