Published : 26 Oct 2014 12:04 PM
Last Updated : 26 Oct 2014 12:04 PM

காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். வார இதழில் வெளியான கட்டுரையால் சர்ச்சை

மகாத்மா காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக் கலாம் என்று ஆர்.எஸ்.எஸ். வார இதழில் வெளியான கட்டுரை யால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆனால் அந்தக் கட்டுரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்து அல்ல, கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து என்று அதன் மூத்த தலைவர் விளக்கம் அளித் துள்ளார்.

கேரள மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ இதழான ‘கேசரி’யில் கடந்த 17-ம் தேதி ஒரு கட்டுரை வெளியானது. சாலக்குடி மக்களவைத் தேர் தலில் தோல்வியைத் தழுவிய பாஜக வேட்பாளர் கோபால கிருஷ்ணன் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:

வரலாற்றை நியாயமான கண்ணோட்டத்துடன் திரும்பிப் பார்த்தால் மக்களுக்கு பல்வேறு உண்மைகள் புரியும். இந்திய, பாகிஸ்தான் பிரிவினை, காந்தி படுகொலை என அனைத்து துயரங்களுக்கும் நேருவின் சுய நலம்தான் காரணம்.

அந்த வகையில் கோட்சே தவறான நபரை கொலை செய்து விட்டார் என்றே தோன்றுகிறது. காந்திக்குப் பதிலாக நேருவை அவர் கொலை செய்திருக்கலாம்.

காந்தியை கொலை செய்யும் முன்பு கோட்சே தனது சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தியுள்ளார். அதேநேரம் காந்திக்கு முன்பாக மரியாதை செலுத்துவதுபோல் நடித்த நேரு அவரின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார்.

காந்தியின் படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால் அந்தப் பழியை ஆர்.எஸ்.எஸ். மீது நேரு சுமத்திவிட்டார் என்று கோபால கிருஷ்ணன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கண்டனம்

இந்தக் கட்டுரைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் அளித்துள்ள புகார்கள் குறித்து விசாரித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயுமாறு கேரள மாநில போலீஸ் துறைக்கு மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா உத்தரவிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். மறுப்பு

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா வெளியிட்ட அறிக்கையில், கேசரியில் வெளி யான கட்டுரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்து அல்ல. அது கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் கேசரி நாளேட்டின் ஆசிரியர் என்.ஆர். மது கட்டுரைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, உண்மைகளை ஆதாரமாக வைத்து கோபாலகிருஷ்ணன் கட்டுரை எழுதியுள்ளார், அதனை சகித்துக் கொள்ள முடியாமல் காங் கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறியபோது, கம்யூனிஸ்ட் தலை வர்களை எதிர்ப்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது, ஆனால் பாஜக, ஆர்.எஸ்.எஸ். விவகாரங்களில் காங்கிரஸும் மாநில அரசும் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகின்றன என்று குற்றம் சாட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x