

கர்நாடக மாநிலத்தில் வரும் 2018-ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட அனைத்துக்கட்சியினரும் வாக்கு களை கவரும் வகையில் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். மாநில பாஜக தலைவர் எடியூரப்பா வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதேபோல மஜத தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா, காங்கிரஸ் விவசாயி களுக்கு எதிரான கட்சி என குற்றம் சாட்டி வந்தார். இத்தகைய பிரச்சாரத்தால் விவசாயிகளின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை அறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, சித்தராமையா கடந்த சில தினங்களுக்கு முன்பு, “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பயிர்க்கடனாகவும், குறுகிய கால கடனாகவும் பெற்ற தொகையில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் 22 லட்சத்து 27 ஆயிரத்து 506 விவசாயிகள் பயனடைவார்கள். இதன் மூலம் அரசுக்கு 8 ஆயிரத்து 165 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
இதேபோல, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தேசிய வங்கி களில் விவசாயிகள் பெற்ற கடனை பாஜக தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கு கர்நாடக பாஜக எம்பிக்களும், எம்எல்ஏக்களும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்” என்றார்.
இந்த அறிவிப்புக்கு கர்நாடக விவசாய சங்கங்களும், சிறு குறு விவசாயிகளும் வரவேற்பு தெரி வித்துள்ளனர். சித்தராமையா வையும், ராகுல் காந்தியையும் பாராட்டி கர்நாட காவில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பாஜக, மஜத ஆகிய கட்சிகள் விவசாயி களின் நம்பிக்கையை பெறுவதற் கான முயற்சிகளில் இறங்கி யுள்ளன.