மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் திருமண நாளில் மலரும் நினைவுகள்

மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் திருமண நாளில் மலரும் நினைவுகள்
Updated on
1 min read

வெளியுறவு விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று தனது திருமண நாளைக் கொண்டாடினார்.

இதையொட்டி, தனது ‘ட்விட்டர்’ வலை தளத்தில் பின்தொடர்வோர் சார்பில் அவருக்கு ஏராளமான வாழ்த்து செய்திகள் குவிந்த வண்ணம் இருந்தன. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சுஷ்மா தனது அரிய பழைய புகைப்படங்களை ட்விட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

உச்ச நீதிமன்ற மூத்த வழக் கறிஞரும், கணவருமான ஸ்வராஜ் கவுஷால் உடன் திருமணத்தி்ன் போது எடுத்துக்கொண்ட புகைப் படத்தையும் அவர் வெளியிட்டுள் ளார். மேலும், ஜெய்பிரகாஷ் நாராயண் உடன் தானும், கணவர் ஸ்வராஜும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை யும் அவர் வெளியிட்டுள்ளார்.

‘ட்விட்டரில்’ சுஷ்மா ஸ்வராஜ், முழுமையாக இயங்கி வருகிறார். மணிப்பூர் பெண்ணுக்கு டெல்லி குடியேற்ற அதிகாரிகளால் ஏற்பட்ட அவமானம், தெற்கு சூடானில் இந்தியர்களின் நலன் மற்றும் பாஸ்போர்ட் விவகாரங்கள் என ட்விட்டர் மூலம் தனக்கு வரும் புகார்களை பெரும்பாலும் சுஷ்மா தீர்த்துவைப்பதாக கூறப்படுகிறது.

தற்போது, 64 வயதாகும் சுஷ்மா ஸ்வராஜ் தனது, 25-வது வயதில், ஹரியாணா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்ச ராக பொறுப்பேற்றது தொடர்பான பழைய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.ஸ்வராஜ் கவுஷாலுடன் சுஷ்மா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in