

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ் சாயத்துகளும் கண்ணாடி இழை கேபிள் (ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்) மூலம் இணைக்கப்பட்டு 2018 இறுதிக்குள் தொலை தொடர்பு உட்கட்டமைப்பு அமைக் கப்படும் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியதும், கேள்வி நேரத் தின்போது இந்த திட்டம் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசியதாவது: தேசிய கண்ணாடி இழை தொலைதொடர்பு திட்டம் இனி பாரத்நெட் என்ற பெயரில் அழைக்கப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இணைத்து தொலைதொடர்பு உட்கட்டமைப்பை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 3 கட்டங்களாக இத்திட்டம் அமல் படுத்தப்படும். முதல்கட்ட திட்டத் தில் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத் துகள் இணைக்கப்படும். இதற் காக பூமிக்கு கீழே கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் முடிக்கப்படும்.
இரண்டாவது கட்டத்தில் எஞ்சிய 1.5 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும். இதற்கான பணி கள் 2018 டிசம்பருக்குள் முடிக்கப் படும். இதனுடன் 5ஜி மற்றும் தடையில்லா இணையதள சேவை கள் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் வழங்கு வதற்கான பணிகள் 2023-க்குள் முடிக்கப்படும். கடந்த ஜூலை 9-ம் தேதி வரை 54,023 கிராம பஞ்சாயத் துகளில் 1,25,642 கி.மீ தூரத்துக்கு கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதில் 7,312 கிராம பஞ்சாயத்துகளில் அகண்ட அலைவரிசை தொலைதொடர்பு பரிசோதனை நடத்தி முடிக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.