

தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற சுங்கத் துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற சிதம்பரம் இதனை தெரிவித்தார். நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மறு சீராய்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தங்கம் இறக்குமதி செய்யப்படுவதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு தங்கம் இறக்குமதி மீதான வரி 3 முறை உயர்த்தப்பட்டது. கடைசியாக உயர்த்தப்பட்ட நிலவரத்தின் படி தங்கம் இறக்குமதி மீதான வரி 10 சதவீதமாக உள்ளது.