

ஹரியாணாவில் காங்கிரஸின் தோல்வியை ஏற்பதாக, அம்மாநிலத்தின் பதவி விலகும் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஹரியாணாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸின் கனவு முற்றிலும் பலிக்காமல் போனது.
தேர்தல் முடிவுகள் பற்றி, பதவி விலகும் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கூறும்போது, "இது மக்கள் தீர்ப்பு. இதை ஏற்றுக்கொள்கிறேன். புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்துகள்.
ஹரியாணாவின் வளர்ச்சிக்கு புதிதாக பொறுப்பேற்கும் அரசு தடையாக இருக்காது என்று நன்ம்புகிறேன்" என்றார் ஹூடா.
கடந்த 2005-ல் இருந்து முதல்வர் பதவி வகித்த ஹூடா தனது கரி சம்ப்லா - கிலோய் தொகுதியில் இந்திய தேசிய லோக் தளம் வேட்பாளர் சதிஷ் குமார் நண்டாலை 47,185 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.