

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்திய இளைஞர் ரவி குமார் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.
உத்தரபிரதேசம் மொரதா பாத்தைச் சேர்ந்த ரவி குமார் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். கடந்த சனிக் கிழமை சுமார் 650 அடி உயரத்தில் ஏறிக் கொண்டிருந்தபோது மாயமானார்.
அவரை தொடர்பு கொள்ள இயலாத நிலையில் மீட்புப் படையினர் அவரை தீவிரமாக தேடினர். இந்நிலையில் நேற்று அவர் சடலமாக மீட்கப்பட்டார். பனிச்சரிவில் சிக்கி அவர் உயிரிழந்திருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்ற 4 பேர் பலியாகி உள்ளனர்.