மங்களூருவுக்குள் நுழைய தொகாடியாவுக்கு தடை

மங்களூருவுக்குள் நுழைய தொகாடியாவுக்கு தடை
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டத்துக்குள் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீண் தொகாடியா நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக, பஜ்ரங் தளம், சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மங்களூரு நகர காவல் ஆணையர் சந்திரசேகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தக்ஷின கன்னடா ( மங்களூரு ) மாவட்டத்தில் நடைபெறும் கருத் தரங்கம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீண் தொகாடியா கலந்து கொள்ளப்போவதாக தெரியவந்துள் ளது. கடலோர கர்நாடகாவில் இரு பிரிவினரிடையே தொடர்ந்து சச்சரவு கள் நீடித்து வருவதால் மதம் சார்ந்த‌ நிகழ்ச்சிகளுக்கு இந்திய தண்டனை சட்டம் 144 (3)-ம் பிரிவின் கீழ் தடை விதிக்கப்படுகிறது.

வன்முறையை தூண்டும் வகையி லும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசும் பிரவீண் தொகாடியா ஜனவரி 24-ம் தேதிவரை தக்ஷிண கன்னடா மாவட்டத்துக்குள் (மங்களூருவுக் குள்) நுழைய தடை விதிக்கப்படு கிறது. உத்தரவை மீறி பிரவீண் தொகாடியா உள்ளே நுழைந்தால், கைது செய்யப்படுவார்'' என்றார்.

மங்களூரு போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு பாஜக, பஜ்ரங் தளம், சிவசேனா, ராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மங்களூரு நகர விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி ஜெகதீஷ் ஷெனவா கூறும் போது, ''மங்களூரு போலீஸார் திட்ட மிட்டு விஷ்வ இந்து பரிஷத் அமைப் புக்கு எதிராக செயல்பட்டு வருகின் றனர். பிரவீண் தொகாடியா மங்களூரு வுக்குள் நுழைய தடைவிதித்திருப் பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித் துக்கொள்கிறோம். இந்த தடை உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, சட்டப்படி அனுமதி பெறுவோம்'' என்றார்.

கடந்த டிசம்பர் 27-ம் தேதி இஸ்லாமிய பேச்சாளர் முனைவர் ஜாஹீர் நாய்க் இதே காரணத்தால் மங்களூருவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in